உத்திரமேரூரில் தொழிலதிபர் ஒருவர் தற்கொலை...

நம்ம நாட்டில் கோழைங்க அதிகம் ஆகிடாங்க போல ஏன்னா முன்னாடி விட தற்கொலை அதிகம் ஆகி விட்டது. முன்னாடிலாம் காதல் தோல்வி இறப்பது சகஜம் ஆக இருந்துச்சு ஆனா இப்போலாம் நண்பர்கள், பெற்றோர் யாராவது எதாவது சொன்னாலே தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதை நிருபிக்கும் விதமாக ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
அதாவது காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் இருதயராஜ் (53). இவர் தொழிலதிபர். பெங்களூரில் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம், உத்திரமேரூருக்கு வந்த அவர், அங்கு விடுதியில் அறை எடுத்து தங்கினார். நேற்று மாலையில், அவர் தங்கியிருந்த அறைக்கதவு திறந்து கிடந்தது. இதனால் விடுதி உரிமையாளர், உள்ளே சென்று பார்த்தார். இருதயராஜ் இறந்துகிடந்தார். அவரது உடல் அருகில் பூச்சி மருந்து பாட்டில் கிடந்ததால் திடுக்கிட்டார்.
இதுபற்றி உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து,உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இருதயராஜ் தங்கியிருந்த அறையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், 'என் தொழில் பார்ட்னர், 6 லட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டார். அத்துடன் என்னைஅவதூறாக பேசி விட்டார்' என்று எழுதப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
