ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான சிறப்புச் சலுகை...

விமான நிறுவனங்கள் பலவும் தொடர்ந்து சலுகை விலை பயண சேவையை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனமும் சாவான் ஸ்பெஷல் 2017 என்ற சலுகையை வழங்குகிறது. இதன் மூலம் ரூ.706 முதல் ஒரு வழி விமான சேவையில் பயணம் செய்யலாம்.
ஜூலை 1 முதல் செப்டம்பர் 20 வரையான பயணங்களுக்கு குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் சில விமானங்களில் மட்டும் இன்றுக்குள் (ஜூன் 21, 2017) முன்பதிவு செய்தால் ரூ.706 முதல் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்.
இந்த கட்டணத்தில் விமான நிலைய வரியும் அடங்கும் என்றும் பயணத்தொலைவைப் பொறுத்து சலுகை மாறுபடும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஇன்றைய பெட்ரோல் விலை பார்ப்போமா.....
Next Postஜூன் 23 -ல் வெளியாகும் "வனமகன்"...
