உ.பியில் அம்மா உணவகம்!

நாட்டில் முதல்முறையாக மலிவு விலையில் உணவளிக்கும் ‘அம்மா உணகவகம்’ தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. மாநில அரசின் மானிய உதவியுடன் நடத்தப்படும் இந்த உணவகங்களை பார்த்து, மற்ற மாநிலங்களும் பல்வேறு பெயர்களில் தொடங்கின. ஆனால் இவற்றை மிஞ்சும் வகையில் இலவச உணவகம் உ.பி.யின் சஹரான்பூரில் தொடங்கப்பட உள்ளது. பாஜக ஆளும் உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகஸ்ட் 9-ல் இந்த உணவகத்தை தொடங்கி வைக்கிறார். சோதனை அடிப்படையிலான இந்த உணவகத்திற்கு ‘பிரபு கீ ரசோய்’ கடவுளின் சமையலறை எனப் பெயரிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் அளிக்கும் நன்கொடையின் உதவியால் பிரபு கீ ரசோயில் அன்றாடம் 300 பேருக்கு இலவச உணவு அளிக்கப்பட உள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
