Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

உலக தடகளப்போட்டி, தென் ஆப்பிரிக்க வீராங்கனைக்கு தங்கப் பதக்கம்!

On August 15, 2017
semanya
Share
semanya உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க வீராங்கனையான செமன்யா, பந்தய தூரத்தை 1 நிமிடம் 55.1 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இவர் ஏற்கெனவே இப்பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் புரூண்டி நாட்டு வீராங்கனையான பிரான்சின் நியோன்சாபா 1 நிமிடம் 55.92 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். அமெரிக்க வீராங்கனையான அஜி வில்சன் இப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 56.65 விநாடிகளில் கடந்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.