உக்கடம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் பேருந்து மோதி பலி !
உக்கடம் அருகே லாரிபேட்டை என்னுமிடத்தில் பொள்ளாச்சி நோக்கி தனியார் பேருந்து அதிவேகமாக நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன்னே இரு சக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இரு சக்கரத்தின் பின்பகுதியில் ஆஜிரா பீவி என்ற சமையல் வேலை செய்யும் பெண் அமர்ந்திருந்தார். வேகமாக வந்த பேருந்து இரு சக்கரவாகனத்தின் பின்பக்கத்தில் பலமாக மோதியது. இதில் ஆஜிராபீவி நிலைதடுமாறி கீழே விழுந்ததுடன், பேருந்தின் சக்கரத்தில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமுற்ற அப்பகுதி மக்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்வரை பெண்ணின் உடலை கொண்டு செல்ல அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்தை அங்கிருந்த அப்புறப்படுத்திய காவல்துறையினர் இது தொடர்பாக விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்ற நட்ராயன் என்கிற பழனியை பிடித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரமுற்ற அப்பகுதி மக்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்வரை பெண்ணின் உடலை கொண்டு செல்ல அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்தை அங்கிருந்த அப்புறப்படுத்திய காவல்துறையினர் இது தொடர்பாக விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்ற நட்ராயன் என்கிற பழனியை பிடித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
