Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

உகாண்டாவில் 3 வயது சிறுவனை கொன்று தின்ற சிறுத்தை !

On May 9, 2018
cheeta 2
Share
தென் ஆப்பிரிக்காவின் உகாண்டா நாட்டில் உள்ள ராணி எலிசபெத் தேசிய பூங்கா மிகவும் பிரசிதி பெற்றது. இந்த பூங்காவில் பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளின் குடும்பங்கள் உள்ள குடியிருப்பில் தங்கி உள்ளனர். அங்கு வேலைப்பார்க்கும் பெண் வனத்துறை அதிகாரியின் 3 வயது மகன் தனது பாட்டியுடன் இருந்தார். விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை தனியே வீட்டினுள் விட்டுவிட்டு பாட்டி வெளியே சென்றுள்ளார். பாட்டியை பின் தொடர்ந்து சென்ற சிறுவன் பாதுகாப்பில்லாத இடத்திற்கு சென்றுவிட்டான். அப்போது திடீரென அங்கு வந்த சிறுத்தை சிறுவனை கடித்து இழுத்து சென்றது. சிறுவனை சிறுத்தை இழுத்துச் செல்வதை பாட்டி கண்டார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்துவனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அடுத்த நாள் சிறுவனின் எலும்புக்கூடு மட்டுமே கிடைத்தது. சிறுத்தையால் சிறுவன் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குடியிருப்பு பகுதியை சுற்றி பாதுகாப்பு வேலி போடப்படாமல் இருந்ததே இதற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சிறுவனை கொன்ற சிறுத்தையை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மனிதனை தின்ற சிறுத்தை மிகவும் ஆபத்தானது, அதனை கண்டுபிடித்து கூண்டினுள் அடைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.