இலங்கையை பழி தீர்த்த இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற்றம்!

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்தியா அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இழந்து தவித்து வருகிறது. இதையடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கயிருக்கிறது. இந்த நிலையில், தற்போது ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்று கைப்பற்றியதன் மூலம் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 119 புள்ளிகளுடன் இந்திய அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 121 புள்ளிகள் பெற்று தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், 114 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடரை இழந்த இலங்கை அணி 8வது இடத்தில் உள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
