Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இரட்டை இலையை மீட்போம்! அமைச்சர் வேலுமணி உறுதி!

On July 31, 2017
velumani
Share
velumani கோவை சிங்காநல்லூரில் உள்ள குளத்தை நகர்ப்புற பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாக அறிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் வேலுமணி கூறியது. ''முதல்வர் தொகுதியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தூர் வாருகிறார் என்றால் அதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நான் என் சகோதரர்களாகவே பார்க்கிறேன். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஓபிஎஸ் அணியினர் எங்கே கூட்டம் நடத்தினாலும் அனுமதி கொடுங்கள் என்றுதான் சொல்லி வருகிறோம். எங்கள் இரு அணிகளுக்குள் ஆரோக்கியமான சூழல் நிலவி வருகிறது. அதிமுகவின் இரு அணிகளிலும் பிரச்சினை செய்வதற்கென்றே ஒருசிலர் செயல்பட்டு வருகின்றனர். இரு அணிகளும் விரைவில் இணையும். இரட்டை இலையை மீட்டு இணைந்து செயல்படுவோம்'' என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.