இயக்குநர் விக்ரமனுக்கு ஹாட்ரிக் வெற்றி!

‘பரபரப்பான சூழலில் பாராளுமன்றம் கூடுகிறது’ என்பதைப் போல நிஜமாகவே பெப்சி பிரச்னை, ஜிஎஸ்டியால் டிக்கெட் விலை உயர்வு, கமல்ஹாசனின் அறிக்கைகள் என தமிழ் சினிமா வட்டாரமே பரபரப்பாக உள்ள சூழலில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் நடந்து முடிந்தது.
சென்னை வடபழனியில் உள்ள மியூசிக் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலை மாவட்ட முன்னாள் நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் பார்வையாளராக இருந்து நடத்தினார். காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை நான்கு மணியளவில் வாக்குப் பதிவு முடிந்து மாலை 6 மணிக்குமேல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்த தேர்தலில் ‘புது வசந்தம்' அணி என்ற பெயரில் போட்டியிட்ட இயக்குநர் விக்ரமன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரைவிட 1,532 வாக்குகள் கூடுதலாக பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
விக்ரமன் இயக்குநர் சங்க தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக இந்த வெற்றியை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!
வெற்றி பெற்ற விக்ரமன். ‘‘அடுத்த ஆறு மாதத்திற்குள் உறுப்பினர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். வெற்றிக்குப்பாடுபட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி’’ என தெரிவித்துள்ளார். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
