இமய மலையில் ரஜினிகாந்த் கட்டிய பாபாஜி தியான மண்டபம்... நவம்பர் 10ம் தேதி திறப்புவிழா!

நடிகர் ரஜினிகாந்தும் அவரது நெருங்கிய நண்பர்களும் இணைந்து ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம் கட்டியுள்ளனர். ரஜினிகாந்தின் ஆன்மீக பற்றும், ஆன்மீக சூற்றலாவுக்காக அடிக்கடி இமய மலைக்கு செல்வதும் அனைவரும் அறிந்ததே.
 ,
மகாவதார் பாபாஜியின் தீவிர பக்தர் ரஜினிகாந்த். அவரது குகை அமைந்துள்ள இமய மலைக்கு அடிக்கடி சென்று ஓய்வு எடுப்பது ரஜினியின் வழக்கம். அவர் செல்வதை அறிந்ததும் ஏராளமான மக்களும் அவரது ரசிகர்களும் பாபா குகைக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர்.
இப்போது, இமய மலையில் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்க்கும் உதவும் வகையில் ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம் கட்டியுள்ளனர்.
இந்த மண்டபத்தில் பக்தர்கள் இலவசமாக தங்கிக் கொள்ளலாம். மண்டபத்தின் கிரஹப்பிரவேச விழா அடுத்த மாதம் நவம்பர் 10ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ரஜினி குடும்பத்தினர், நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். ரஜினிகாந்த் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
