அதிமுகவை அழிக்கும் நோக்கில் செயல்படும் அமைச்சர்கள் : சி.ஆர்.சரஸ்வதி குற்றச்சாட்டு!

 ,
அதிமுகவை அழிக்கும் நோக்கில் அமைச்சர்கள் செயல்படுகிறார்கள் என்று தினகரன் ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி குற்றம்சாட்டியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஜெயலலிதா கண்ட கனவுப்படி இந்த ஆட்சியும், கட்சியும் இன்று இல்லை என அவர் வேதனை தெரிவித்தார். விரைவில் இரட்டை இலை சின்னத்தை பெற்று கட்சியையும், ஆட்சியையும் தாங்கள் கைப்பற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
 ,
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்களது MLA-க்களுக்கு விரைவில் நியாயம் கிடைக்கும் என தெரிவித்தார். OPS மற்றும் அவரது அணியை சேர்ந்தவர்களை நியாயமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்றார். ஜெயலலிதா மரணம் குறித்து CBI விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
