Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்று விசாரணைக்கு வருகிறது செந்தில் பாலாஜியின் வழக்கு

On August 7, 2024
8c12e198-61ff-4056-acc9-d7adb4273c4f
Share

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்து செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது. சென்னை அமர்வு நீதிமன்றம் வழங்கிய நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், தன்னை விடுவிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

மேலும் அமலாக்கத்துறை கைப்பற்றிய ஆவணங்களின் கோப்புகளை தங்களுக்கு வழங்க கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு அமலாக்கத்துறை தரப்பில் கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்து குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.