இன்று முதல் துவங்கும் ரமலான் நோன்பு !

தமிழகத்தில் ரமலான் நோன்பு (மே 17) இன்று முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் வெளியிட்டுள்ளார்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். ரமலான் மாதம் தொடங்குவதற்கான பிறை புதன்கிழமை மாலை தெரிந்ததைத் தொடர்ந்து, நோன்பு வியாழக்கிழமையான இன்று அதிகாலை முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கடைப்பிடிக்கப்பட்ட பிறகு, அந்த மாதம் முடிவது அதற்கான பிறை தெரிவதை வைத்தே கணக்கிடப்படுகிறது. இதன் பிறகு, ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
