இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற பாஜக செயல்பட்டு வருகிறது- திருமாவளவன் சாடல்..!

கர்நாடக தேர்தல் முடிவுகள், ஆளூநரின் முடிவு ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மையில்லாத பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து, எடியூரப்பா முதல்வராக பதவியும் ஏற்றுவிட்டார்.
அடுத்து அனைவரும் சொன்னது போல இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு பின்வருமாரு பேசினார். அவர் கூறியது பின்வருமாறு,
தமிழக நலனுக்காக போராடுபவர்கள் மீது பொய் வழக்கு போட்டு மத்திய மாநில அரசுகள் முடக்கப்பார்க்கிறது. இந்நிலை தொடர்ந்தால், மக்கள் வெகுண்டு எழுவார்கள். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு அரசியல் அமைப்புகள் எழுச்சி பெற்று வருகிறது. அதை நசுக்கும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளை இலக்காக வைத்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக செயல்பட்டு வருகிறது என சாடியுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
