Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இனி ஜிஎஸ்டியால் திருப்பதியில் என்னவாகும் தெரிந்து கொள்வோமா...

On June 16, 2017
lattu
Share
lattu நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை கொண்டு வரும் வகையில், வரும், ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வரிவிதிப்பானது ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கும் மேல் வருவாய் கிடைக்கும் கோயில்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானம் கொட்டும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள், தரிசன டிக்கெட்டுகளின் விலை உயரும். தற்போது 1 லட்டு தயார் செய்ய 35 ரூபாய் செலவாகும் நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பிரசாதங்கள் தயார் செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக 6 சதவீத வரி செலுத்த வேண்டிடும். இதனால் லட்டு உள்ளிட்ட பிரசாதங்களின் விலை உயரும். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்க, தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ள ரூ.500க்கும் மேல் கட்டணம் உள்ள அறைகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும். இதனால் அறைகளின் வாடகையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.