Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் கைது!

On November 13, 2024
WhatsApp Image 2024-11-13 at 20.51.00
Share

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக நக்கீரன் கோபாலை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 27 ம் தேதி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகனும், இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி பேசும்போது,நக்கீன் ஆசிரியர் கோபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தி.மு.க.,வைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல்ஜலில் என்பவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஓம்கார் பாலாஜி மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், குற்ற நோக்குடன் செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து ஓம்கார் பாலாஜியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முன்ஜாமின் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அவர் ஆஜர் ஆனார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ஐகோர்ட் வளாகத்திலேயே அவரை எஸ்பிளனேடு போலீசார் கைது செய்து, ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஓம்கார் பாலாஜியுடன் ரேஸ்கோர்ஸ் போலீசார் கோவை திரும்புகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.