Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆக்சன் கதாநாயகனாக ராம்கி களமிறங்கும் – 'இங்கிலிஷ் படம்'

On October 2, 2017
_MG_0050
Share
_MG_0013 ஆர் .ஜே.மீடியா கிரியேஷன்ஸ் சார்பில் ஆர் ஜே எம் வாசுகி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “இங்கிலிஷ் படம் ” இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ராம்கி கதாநாயகனாக நடித்துள்ளார். மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி,மதுமிதா, சஞ்சீவ் இன்னும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.படத்திற்கு ஒளிப்பதிவு சாய்சதிஷ்,படத்தொகுப்பு மகேந்திரன், கலை பழனிவேல்,பின்னணி இசை நௌசாத். இப்படம் வருகிற அக்டோபர் 6-ம் தேதி திரைக்கு வர உள்ளது.  , இந்தப்படம் பலவித சுவாரசிங்களும், த்ரில்லர் காட்சிகளும் நிறைந்ததாக அமைந்துள்ளது. அதன் சுவாரசியங்கள் பின்வருமாறு…  , பல வருடங்களுக்குப்பிறகு ராம்கி நேரடியாக கதாநாயகனாக நடிக்கும் படம் இது. இதற்கு முன்பு அவர் கதாநாயகனாக நடித்தப்படம் பெரியளவில் போகவில்லை என்பதால் இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. _MG_0131  , இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் என படக்குழு முழுவதும் புதுமுகங்களாக இருப்பதாலும், சமீபத்தில் புதுமுக இயக்குனர்களின் படம் பெரியளவில் வெற்றிபெற்றுவருவதால் இந்தப்படமும் வெற்றிப்படமாக அமையுமென எதிர்பார்க்கலாம். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜாராணி சீரியல் சின்னத்திரை ரசிகர்களை அதிகளவு கவர்ந்துள்ளதாலும் அதன் நாயகனான சஞ்சீவ் முதல்முறையாக வெள்ளித்திரையில் கிட்டத்தட்ட இந்தப்படத்தின் இரண்டாம் கதாநாயகனாகவே தோன்றுவதாலும் சின்னத்திரை ரசிகர்களுக்கு இந்தப்படம் மிகப்பெரிய விருந்தாக அமையும். _MG_0050 படத்தில் காமெடிக்கு குறைவில்லாதவகையில் சிங்கமுத்து, சிங்கம்புலி, மதுமிதா என ஒரு காமெடிப்பட்டாளமே களமிறங்கியிருப்பதால் ரசிகர்கள் நிச்சயம் ஒரு காமெடி விருந்துக்கு தயாராகலாம்.  , படம் ஹாரர் நிறைந்த காமெடி படமாகவும் இருப்பதாலும்,தொடர்ந்து பேய்ப்படங்களாக வந்து பேய் ரசிகர்கள் அதிகளவில் இருப்பதாலும் அவர்களுக்கு இதுவொரு பேய் விருந்தாக அமைவதற்கான வாய்ப்புகளும் உள்ளது . படத்தில் ராம்கி வடசென்னை தாதாவாக நடித்திருப்பதும், ஆக்சன் சீன்களுக்கும் பஞ்சமிருக்காது என்பதும் படத்தின் கூடுதல் சிறப்பு. இங்கிலிஷ் படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் இத்திரைப்படத்திற்கு அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும், என இயக்குனர் தெரிவித்திருப்பதாலும் கதை நிச்சயம் ஆக்சன் விரும்பிகளுக்கு ஒரு விருந்தாக அமையுமென எதிர்ப்பாக்கலாம். _MG_0091 இரண்டு கதாநாயகிகள், மற்றும் படத்தின் டீசர் , டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுருப்பதாலும் படத்தின் மீதான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வர உள்ளது.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.