சசிகலா கலந்துக் கொள்ளும் முதல் சினிமா விழா....

காலம்சென்ற முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர் அவர்களின் 100வது பிறந்தநாள் விழா நாளை தமிழகமெங்கும் ஆங்காங்கே நடைபெறுகிறது. சினிமா சங்கங்களும் நிகழ்வுகளை நடத்தவிற்கிறது.
ஜனவரி 12ம் தேதி திரைத்துறையை சேர்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள் சிலர் அ.தி.மு.க பொது செயலாளர் திருமதி. சசிகலா அவர்களை போயஸ் தோட்டம் சென்று சந்தித்தனர். அப்போது சினிமா சங்கங்கள் நடத்தவிற்கும் மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர் அவர்களின் 100வது பிறந்தநாள் விழா பற்றி தெரிவித்துள்ளனர். அப்போது சசிகலா அவர்களுடன் பேசுகையில், அபிராமி திரையரங்கில் சினிமா சங்கங்கள், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு விழா நடத்தவிற்பதாகவும் அதில் சசிகலா அவர்களை குத்துவிளக்கு ஏற்றி விழாவினை ஆரம்பித்து வைக்கும்படி கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது.
சசிகலா அவர்கள் திரைத்துறையினரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. எனவே நாளை அபிராமி திரையரங்கில் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் சசிகலா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை ஆரம்பித்துவைப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. இவ்விழா சசிகலா அவர்கள் கலந்துக் கொள்ளவிற்கும் முதல் திரைத்துறை விழா என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Next Postசூரியாவின் S3 இனி C3...
