ஜஸ்ட் ஒரு பாட்டு தான், ஷில்பா மஞ்சுநாத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு...

வரும் 18ஆம் தேதி வெளி வர உள்ள "காளி" மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகை ஆகாது.விஜய் ஆண்டனி நடித்து , இசை அமைக்க , விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் "காளி" படத்தில் வரும் "அரும்பே" இணைய தளத்தில் ரசிகர்கள் இடையே ஏக வரவேற்பை பெற்று உள்ளது.
அந்த பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்து இருக்கும் இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஷில்பா மஞ்சுநாத், இப்போதே ரசிகர்களின் கனவு கன்னியாகி தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மானித்துக் கொண்டு உள்ளார்.

" காளி படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ் திரை உலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் சக நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் பட்டியல் என இந்த படத்தில் வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளன. என்னுடைய கதா பாத்திரத்தின் பெயர் பார்வதி. என் நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனா, அதற்கு முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம். நான் நவ நாகரீகமான சூழ் நிலையில் வளர்ந்த பெண். பார்வதி கதாபாத்திரமோ முற்றிலும் மாறாக கிராமிய சூழ்நிலையில் வளரும் பெண். பல்வேறு பருவத்தை பிரதிபலிக்கும் பாத்திரம். மனோதத்துவ ரீதியாக மிக மிக பலம் பொருந்திய கதாபாத்திரம்.

"அரும்பே" பாடல் நான் எண்ணி கூட பார்த்திராத உயரத்தை தந்து உள்ளது.ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டு என்னை மேலும் உச்சத்தில் கொண்டு போவார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன். தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி,சாண்ட்ரா, கதாநாயகன் விஜய் ஆண்டனி, மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு நான் காலம் முழுக்க கடமை பட்டு உள்ளேன்" என்கிறார் அழகு புயல் ஷில்பா மஞ்சுநாத்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
