அதிமுக அணிகள் நாளைக்குள் இணைந்து விடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு !

அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வமும் சில நாட்களில் இணைப்பு பற்றிய நல்ல முடிவு வரும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், அனைவரும் எதிர்பார்ப்பதைப் போலவே கூடிய விரைவில் அணிகள் இணைப்பு நடக்கும் என்று குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக அணிகள் இணைப்பு நாளைக்குள் கண்டிப்பாக நடக்கும் என்று உறுதிபட தெரிவித்தார். மேலும், மக்களின் அன்பைப் பெற இரு அணிகளும் இணைந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
