Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஹைகோர்ட்!

On October 30, 2017
siknal1
Share
siknal1 போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுகின்றன. இந்த விளம்பர பேனர்கள் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிப்பதால் விபத்துகள் நேர்கின்றன. எனவே போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்க வேண்டும் என கோரி கோவை நுகர்வோர் மையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டது. ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தால், அனுமதி முடிந்தவுடன் அந்த பேனர்களை அகற்றிவிட வேண்டும் எனவும் அனுமதியை புதுப்பிக்கக்கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. dheepa உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களோ உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்களோ வைக்கக்கூடாது எனவும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர்கள் அமைக்கக்கூடாது எனவும் அண்மையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று போக்குவரத்து சிக்னல்களிலும் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்துள்ளது. siknal பேனர்களுக்கும் கட் அவுட்களுக்கும் எதிராக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துவருவது அதனால் பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.