Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘அச்சச்சோ நான் அப்படி சொல்லலை!’ _பார்த்திபன் விளக்கம்

On August 7, 2017
-parthiban3
Share
-parthiban3 நேற்று நிகழ்ச்சியொன்றில் பார்த்திபன் பேசிய கருத்துக்கு எதிர்மறையான விமர்சனம் எழுந்துள்ளது. அது குறித்து பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். அவர் குறிப்பிட்டிருப்பதாவது:- கமல்+ரஜனி சார்க்கு ரசிகன் நான். அதிலும் ரஜனி சார் எனக்கு மிக நெருக்கமான நண்பர்! என் வளர்ச்சியில் அக்கரை காட்டியவர். இதே சிரிப்புடன் போன மாதமும் சொன்னேன் சிறு சலசலப்புமில்லை ஆனால் நேற்றைய மேடையும் சூழலும் ஏதோ ஒரு அரசியலை கிண்டியிருப்பதை அறிகிறேன். இருவரும் அரசியலுக்கு வந்தாலும் ஆதரிப்பேன். காரணம்,அரசியலில் ஆதாயம் தேவையில்லை இருவருக்கும்.ஆனால் விமர்சிப்பது தனிமனித உரிமை.பொதுவாழ்வில் விமர்சனங்களை எதிர் கொள்ள இன்னும் தொண்டரகளாக மாறாத ரசிகர்களுக்கு சிரமமாகவே இருப்பதால் அவர்களின் கோபத்தை சிலர் கொச்சையாகவும் பலர் ரஜனி சாரின் கண்ணியத்துடனும் மரியாதையுடனும்"நீங்களுமா?" என அதிர்ந்திருக்கிறார்கள் அவர்களின் மென்மையான உணர்வு புரிவதால் இந்த விளக்கத்தை மனப்பூர்வமாக தெரிவிக்கிறேன். நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அந்த நாள் விரைவில் வர வேண்டுமென அவர் வணங்கும் ஆண்டவனை நானும் வேண்டுகிறேன் !

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.