Samar releasing on Dec28:
டிசம்பர் 28-ல் உலகெங்கும் வெளியாகிறது “சமர்”:
விஷால், த்ரிஷா, சுனைனா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் சமர் படத்திற்கு தணிக்கைக் குழுவினர் U/A சான்று வழங்கியுள்ளனர். விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் சமர். டைரக்டர் திரு இயக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தை டைரக்டர் திரு இயக்கியிருக்கிறார்.
தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் சமர். முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா. காதல் மற்றும் ஆக்ஷன் திரில்லரான இத்திரைப்படம் தணிக்கைக் குழு சான்றிதழுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. பாலாஜி ரியல் மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள “சமர்” வரும் 28-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.

