Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விபத்தில் சிக்கியது நாசரின் மூத்த மகன் பைசல். இவர் "சைவம்" பட நடிகர் அல்ல:

On May 22, 2014
Faizal with degree certificate
Share
நடிகர் நாசரின் மூத்த மகன் பைசல் கார் விபத்தில் கவலைக்கிடம். இன்று காலை பைசல் தன் நண்பர்கள் நால்வருடன் பாண்டிச்சேரி அருகில் காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் பைசல்'யின் நண்பர்கள் மூவர் விபத்து நடந்த இடத்திலேயே உயிர் இழந்தனர். பைசலும் அவருடன் இருந்த மற்றொரு நண்பரும் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தனர். பைசல் மற்றும் அவருடைய நண்பர் உடனடியாக சென்னை பெருங்குடியில் உள்ள செட்டிநாட் மருத்துவமனியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சற்று வந்த செய்திகள் படி, பைசல் மற்றும் அவருடைய நண்பர் இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிகபடலாம் என சொல்லப்படுகிறது. நடிகர் நாசருக்கு இரு மகன்கள். அதில் மூத்தவன் பெயர் பைசல், இளையவன் பெயர் லுத்புதீன். பைசல் மலேசியாவில் உள்ள “Limkokwing University Of Creative Technology” கல்லூரியில் தன் பட்ட படிப்பை மேற்கொண்டார். அங்கு அவர் "கேம் டிசைனர்" (வீடியோ கேம்) பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார். இளைய மகன் லுத்புதீன் அதே பல்கலைகழகத்தில் "சவுண்ட் & மியூசிக் டிசைனர்" பட்ட படிப்பை மேற்கொண்டுள்ளார். இயக்குனர் விஜய் இயக்கி அதில் நாசர் நடித்துள்ள "சைவம்" திரைப்படத்தில் லுத்புதீன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஊடகங்கள் விபத்தில் சிக்கிய பைசல் தான் "சைவம்" திரைப்படத்தில் நடித்துள்ள லுத்புதீன் என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய பைசல் லுத்புதீன்'யின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. 1 2 3 Faizal &, Kameela Naseer Faizal with degree certificate Faizal with Family - 2 Faizal with Family Faizal with Kameela Naseer Faizal

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.