மாயி இயக்குனர் சூரியபிரகாஷின் மறுபிரவேசம் ‘’வருசநாடு’’!!

பெரும் வெற்றி பெற்ற மாயி, திவான், மாணிக்கம் மற்றும் தெலுங்கு படமான பரித்த சிம்மாரெட்டி போன்ற வெற்றி படங்களை இயக்கிய சூரியபிரகாஷ் இயக்கும் அடுத்த படம் ‘’’வருசநாடு’’. இந்தப் படத்தை மாயி பிலிம்ஸ் சார்பில் R.செந்தில்குமார் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். P.குமரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.
சிங்கமுத்து, மயில்சாமி, M.S.பாஸ்கர், சிங்கம்புலி, ராஜ்கபூர், சந்தானபாரதி, சம்பத்ராம், பாரதிகண்ணன், க.த.கா.திருமாவளவன், C.I.D.சகுந்தலா, யுவராணி, ஸ்ரீகவி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு , T.பாஸ்கர். இசை , யத்தீஸ் மகாதேவ்
படம் பற்றி இயக்குனர் சூரியபிரகாஷிடம் கேட்டபோது, ”அடிதடி என்றாலே அல்வா சாப்பிடுவது மாதிரியான கொள்கை கொண்டவன் அழகர் யாரும் யாரையும் அடிக்கக்கூடாது. அடிதடியே பிடிக்காதவள் செல்வி இவர்கள் இருவருக்குள்ளும் காதல். அவளை பொருத்தவரை அவன் ஒரு அப்பாவியாக தெரிகிறான் அதுவே அவனது வாழ்க்கையில் பெரிய பிரச்சனை ஏற்பட காரணமாகிறது. இதை வைத்து கிராம பின்னணியில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை நிகழ்ச்சியை கதைகருவாக எடுத்து திரைக்கதையாக்கி இருக்கிறேன்.
 ,
படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், வாடிப்பட்டி, நிலக்கோட்டை, பெரியகுளம், வத்தலகுண்டு, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படு கமர்ஷியல் காதல் கதை என்கிறார் இயக்குனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
