Kamalhassan invites short films on DTH:
DTH பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த கமல் நடத்தும் குறும்படப் போட்டி:
விஸ்வரூபம் படத்தை DTH மூலம் வெளியிட உள்ள நடிகர் கமல்ஹாசன் DTH பற்றிய குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.
விஸ்வரூபம் படத்தினை தயாரித்து இயக்கி நடித்துள்ள கமல் அதை DTH மூலம் முதலில் ஒரு நாளைக்கு முன்பே வெளியிடுகிறார். இதற்கு விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு பக்கம் கேபிள் டி.வியில் இலவசமாக ஒளிபரப்புவோம் என்ற அச்சுறுத்தலும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் DTH பற்றி மக்களுக்கு தெரிவிக்க குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். 60 நொடி மட்டுமே (1 நிமிடம்) ஓடக்கூடிய அளவில் குறும்படம் ஒன்றை தயாரித்து கமல்ஹாசனுக்கு நேரடியாக அனுப்புங்கள். போட்டிக்கான கடைசித் தேதி டிசம்பர் 31. மேலும் இது பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள maiam360degree@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
 ,
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
