Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

H ராஜாவிடம் பரிதாபமாக மன்னிப்பு கேட்ட 'பரிதாபங்கள் கோபி சுதாகர் '

On September 29, 2024
WhatsApp Image 2024-09-29 at 22.19.16
Share
திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை ஆந்திராவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து பிரபல யூடியூப் சேனல் ‘பரிதாபங்கள்’ சேனலை நடத்திவரும் கோபி மற்றும் சுதாகர் “லட்டு பரிதாபங்கள்” என்ற தலைப்பில் ஒரு நகைச்சுவை வீடியோவை வெளியிட்டனர். ஆனால், சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், அவர்கள் வீடியோவை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல், எக்ஸ் பக்கத்தில் தங்கள் விளக்கத்தை அளித்து, அந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாகவும், யாரின் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை எனவும் கூறியுள்ளது. அவர்கள் மேலும், யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து, வீடியோவை நீக்கியிருப்பதாகவும், இப்போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என உறுதியளித்தனர். இருப்பினும், நீக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்ததால், அது தொடர்ந்து பரவியது. இதனையடுத்து, இந்துக்களின் உணர்வுகளை அவமதித்ததாக கூறி தமிழக பாஜக சார்பில் அமர் பிரசாத் ரெட்டி, ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் புகார் அளித்தார். பின்னர், கோபி மற்றும் சுதாகர் தொலைபேசி வாயிலாக தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜாவிடம் மன்னிப்பு கேட்டனர். இதனால், பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீதான புகாரை திரும்பப் பெற முடிவு செய்ததாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி அறிவித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.