Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"U" தணிக்கையுடன் அல்டிமேட் காமெடியாக வந்துள்ளது இயக்குனர் வின்சென்ட் செல்வா'வின் "துள்ளி விளையாடு":

On April 3, 2013
thullivilaiyadu- Angitha (49)
Share
ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ள படம் துள்ளி விளையாடு. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. இந்தப் படத்தைப் பார்த்த திரைப்பட தணிக்கை குழுவினர் எந்த கட்டும் இல்லாமல் க்ளீன் “யு” சான்று அளித்ததோடு, படம் தங்களை ரொம்பவே மகிழ்வித்ததாகத் தெரிவித்தனர். இப்படத்தை திரையுலக பிரமுகர்கள் சிலருக்குப் போட்டுக் காட்டியுள்ளனர். படம் பார்த்த அத்தனைப் பேருமே விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். அத்தனை நகைச்சுவையாக வந்துள்ளதாம் படம். இதுகுறித்து இயக்குநர் செல்வா கூறுகையில், இது ஒரு சிங்கத்துக்கும், மூன்று எலிகளுக்குமிடையே நடக்கிற தமாஷ் விளையாட்டு என்று வைத்துக் கொள்ளுங்களேன். நம்ம பிரகாஷ் ராஜ் சார் தான் சிங்கம், யுவராஜ், சூரி, சென்றாயன் ஆகியோர் தான் அந்த மூன்று எலிகள். இந்த விளையாட்டோடு தீப்தியின் காதல் விளையாட்டும் சேர காமெடி ப்ளஸ் காதல் கதம்பமாக வந்துள்ளது. பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளனர்," என்றார். ஸ்ரீகாந்த் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.