Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

Continuous laugh riot awaits:

On December 25, 2012
sutta-kathai-tamil-movie-stills-12
Share
ரவீந்தர் சந்திரசேகர் தயாரிப்பில் சுப்பு இயக்கும் "சுட்ட கதை": லிப்ரா புரோடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் தற்போது மைக்கேல் - நந்திதா நடிக்க "நளனும் நந்தினியும்" என்ற படத்தை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்.முடிவடையும் கட்டத்தில் உள்ள இப்படத்தை தொடர்ந்து இதே பட நிறுவனம் "சுட்டகதை" என்ற படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் பாலாஜி, வெங்கி இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். பாலாஜி ஏற்கனவே "பொய் சொல்ல போறோம், மாலை பொழுதின் மயக்கத்திலே, நண்பன்” போன்ற படங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கியவர். இவர் FM ரேடியோவில் RJ-வாகவும் புகழ் பெற்றவர். வெங்கி யூடுயுப் இணையத்தில் ஸ்டேப் ஸ்டேப் மானி என்ற நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர். இவர் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா நண்பராகவும் நடித்துள்ளார். முன்தினம் பார்த்தேனே, கவுரவம் போன்ற படங்களில் நல்ல வேடங்களில் பங்கேற்ற லட்சுமிபிரியா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், சிவாஜி,ஜெயப்ரகாஷ், சம்ஸ், ரிம்சன் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு நிஷார். இவர் ரத்னவேலுவின் உதவியாளர். தற்போது நளனும் நந்தினியும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறார். மேட்லி ப்ளுஸ் இசையமைக்கிறார்.இவர் ஆக்ஸிஜன் பேண்ட் என்ற இசைக்குழு நடத்துபவர்கள். மதன் கார்கியுடன் சுப்புவும் பாடல்களை எழுதியுள்ளனர். 1985-95-களில் காமிக் நாவல்கள் மிக பிரபலம். அதில் இடம் பெற்ற சம்பவங்கள் தான் சுட்டகதை. ஆனால் இது சுடாமல் சுட்ட கதை. இரண்டு மணி நேரம் இடைவிடாது சிரிப்பு மழைதான். கொடைக்கானலில் படமாகும் திகில் காமெடி படம் தான் சுட்டகதை.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.