Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மீண்டும் நடிக்க வருகிறார் இயக்குனர் இமயம்!!

On May 7, 2013
518b
Share
நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக இருந்து, "செல்லமே" மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஷால். "சண்டகோழி", "திமிரு" போன்ற பல வெற்றிப்படங்கள் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பெற்றார். பாலாவின் "அவன் இவன்" படத்தில் இப்படி ஒரு நடிப்பா என்று எல்லோரையும் பிரமிக்க வைத்தார். தெலுங்கிலும் இதே போல் இவரது படங்கள் வசூல் பெற்றது. இப்பொழுது, சுந்தர்.சி இயக்கத்தில் "எம்.ஜி.ஆர்" படத்தில் நடித்து முடித்து விட்டு, 'மலைக்கோட்டை' வெற்றி டைரக்டர் பூபதிபாண்டியன் இயக்கத்தில் காமெடி கலந்த ஆக்ஷன் படமான "பட்டத்து யானை" படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் நடிக்கும் புதிய படத்தின் பெயர் "பாண்டிய நாடு" என்ற பிரமாண்டமான படம். இப்படம் மூலம் விஷால் முதன் முறையாக தயாரிப்பாளராகிறார். இவர் தனது நிறுவனத்திற்கு விஷால் பிலிம் பேக்டரி என்று பெயரிட்டுள்ளார். விஷால் பிலிம் பேக்டரியின் முதல் இயக்குனராக சுசீந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார். 'நான் மகான் அல்ல' என்ற யதார்த்தமான ஆக்ஷன் படத்தை தந்த இவர் இப்படத்தின் கதையையும் வித்தியாசமான கதை அமைப்பாக உருவாக்கியுள்ளார். ரிவென்ஜ்-ஆக்ஷன் படமாக இப்படம் இருக்கும் என்கிறார் டைரக்டர். முதல் முறையாக டி.இமான் இசையமைக்கிறார். விஷால் இப்படத்தில் மதுரையில் வாழும் ஒரு சாதாரண பையனாக நடிக்கிறார். அவரது  ரிவென்ஜ் நம்மை அதிர வைக்கும் என்கிறார். விஷாலின் அப்பாவாக பாரதிராஜா நடிக்கிறார். விஷால் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மேலும் சூரி, விக்ராந்த், வைரவன், 'ஆரண்யகாண்டம்' சோமசுந்தரம் மற்றும் பலர். 'மே' மாதம் 15-ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. மதுரை, குன்னூர், நெல்லை போன்ற இடங்களில் படமாக்கப்படுகிறது. தீபாவளிக்கு திரைக்கு வருகிறது பாண்டியநாடு.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.