5 லட்ச வழக்குகள்,11 கோடி அபராத தொகை : தமிழக காவல்துறை..

தமிழகத்தில் கொரோனாவால் 1,685 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 798 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 18,325 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 21 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 23,302 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 1,243 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,545 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 5 லட்சத்து 62 ஆயிரத்து 233 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 6 லட்சத்து 04 ஆயிரத்து 769 பேர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டதுடன் 4 லட்சத்து 57 ஆயிரத்து 641 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 11 கோடியே 13 லட்சத்து 25 ஆயிரத்து 154 ரூபாய் பணம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
