Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'31-ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டுவிழா'!..

On March 28, 2017
actor
Share
actor தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இதில் இருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு காலி மனையாக இருக்கிறது. இந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று சங்கத்தில் புதிதாக பொறுப்புக்கு வந்த நிர்வாகிகள் தெரிவித்தனர். கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. நடிகர்கள் புதிய படங்களில் நடித்து சம்பள தொகையை கட்டிட நிதிக்கு வழங்குவதாகவும் அறிவித்தனர். ரூ.26 கோடி செலவில் 4 மாடிகளில் இந்த கட்டிடத்தை கட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 1,000 பேர் அமரும் அரங்கம், திருமண மண்டபம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம் போன்றவையும் இங்கு அமைய உள்ளன. இந்த கூட்டத்தில் வருகிற 31-ந் தேதி நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக மாநகராட்சி அனுமதியை பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அடிக்கல் நாட்டு விழாவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மற்றும் 23 திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகளை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.நடிகர் சங்கத்தில் தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டுமான பணிக்கு ஒவ்வொரு செங்கலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் செங்கல் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது...

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.