2018-ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு..!

மெர்சல் படத்திற்காக 2018-ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக லண்டனை சேர்ந்த ஐஏஆர்ஏ அமைப்பு அறிவித்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 100-வது படம் தான் `மெர்சல்'. இயக்குனர் அட்லி
இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் . எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
மெர்சல் படத்திற்காக ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு தேர்வு நடைபெற்றது. இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த தளபதி விஜய், தற்போது சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக
ஐஏஆர்ஏ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இது தமிழர்களுக்கும் ,தமிழ் சினிமாவுக்கும் கிடைத்த பெருமை.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
