Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சிம்பொனி இசை மூலம் வதந்திகளுக்கு பதிலடி தர இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்...!

On November 15, 2014
maxresdefault
Share

கமல் தவிர, சூப்பர்ஸ்டார் படம் முதற்கொண்டு கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். வெற்றிகரமாக தனது இசைப்பயணத்தில் கால் சதத்தை தாண்டிவிட்டார்

தற்போது ஹீரோவாகவும் களம் இறங்கி மூன்று படங்களில் நடித்துவருகிறார். அதனால் நடிகராக மட்டுமே அவர் பயணம் மேற்கொள்வார், இசை துறையில் கவனம் செலுத்த மாட்டார் என ஒருசிலர் வதந்திகளை பரப்பி வந்தனர். ஆனால் ஜி.வி.பிரகாஷ் சிம்பொனி இசைக்காக ஜெர்மனி செல்ல இருப்பதன் மூலம் இசையைவிட்டு அவர் ஒருபோதும் விலகமாட்டார் என்பதை வதந்தி பரப்புபவர்களுக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்.

ஜெர்மனியில் உள்ள Stuttgart என்னும் நகரத்தில் மேற்கொள்ள இருக்கும் இசைப்பதிவுக்காக விரைவில் ஜெர்மனி செல்ல இருக்கிறார்..இந்த வாய்ப்பு பற்றி அவர் குறிப்பிடும்போது, “இசை உலகில் மிக முதன்மையானவர் எனக் கருதப்படும் கோன்ராத் பௌமன் அவர்களின் இசை காற்றில் மிதக்கும் ஜெர்மனி நாட்டில் என்னுடைய இசையும் கலக்கும் என்பதே எனக்கு பெருமை ‘ என்கிறார் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் ஜி. வி.பிரகாஷ்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.