Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு : அரசுப்பள்ளி தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்த கன்னியாகுமரி மாவட்டம்..!

On April 19, 2019
fc5d6848c315dd756bd6b42ba62816c2
Share

இன்று வெளியாகியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவில், அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

2018-19 கல்வியாண்டுக்கானபிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகியுள்ளன.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதிய நிலையில்,91.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 88.57%, மாணவியர் 93.64%.

தமிழகத்தில் சிறைகளில் உள்ள 45 சிறைக்கைதிகள் தேர்வு எழுதிய நிலையில், அதில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் 2692 பேர் தேர்வு எழுதினர். அதில் 2404 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தில்,கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.46%சதவீதமாக உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.