116 பேருடன் ராணுவ விமானம் மாயம்: மியன்மர்...

மியான்மர் நாட்டில் இன்று காலை 105 பயணிகள் மற்றும் 11 விமான ஓட்டிகளை ஏற்றிக் கொண்டு அந்த நாட்டின் ராணுவ விமானம் ஒன்று தெற்கில் உள்ள மியெய்க் நகரத்தில் இருந்து யாங்கூன் நகருக்கு சென்று கொண்டு இருந்தது. அப்போது, சர்வதேச நேரத்தின்படி இன்று காலை 7.05 மணிக்கு அந்த விமானம், விமானக் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது.
தவேய் நகருக்கு 20 கி.மீட்டர் மேற்கில் இந்த விமானம் மாயமானது. தற்போது இந்த விமானத்தை தேடி வருவதாக ராணுவ தலைமை காமண்டர் அறிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியுள்ள செய்தியில், ''விமானத்தில் 105 பயணிகள் மற்றும் 11 விமான ஓட்டிகள் பயணித்தனர்''என்று தெரிவித்துள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
