10ஆம் வகுப்பு சிறுமி தீக்குளிப்பு பாலியல் தொல்லைக்கு ஆளானதாள்...

நெற்குன்றம் அருகே உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தாளாளராக பணியாற்றி வரும் நபர் ஒருவர், சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து வெளியே கூறினால், பலாத்கார வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இவர் சிறுமிக்கு நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி,இவர் தன்னுடைய குடும்ப மானத்தை கருத்தில் கொண்டு இது குறித்து யாரிடமும் தேர்விக்காமல் இருந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் சிறுமியை அடிக்கடி தொந்தரவு செய்து பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் கடும் மனா உளைச்சலுக்கு ஆளான இச்சிறுமி, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பியபோது, அவரது பெற்றோர்கள் யாரும் வீட்டில் இல்லை. அந்நேரத்தில் தனிமையில் இருந்த சிறுமி வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி கொளுத்திக்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பலத்த தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பாக சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை விளக்கி கடிதம் எழுதி வைத்து வைத்துள்ளார். சிறுமியின் தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து குற்றம்சாட்டப்படும் நபர் தப்பியோடி தலைமறைவாக இருந்துள்ளார். சிறுமியின் தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பாலியல் குற்றவாளியை கோயம்பேடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
