'ஸ்னாப்டீல் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட முடிவு'!...

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஸ்னாப்டீல் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.இந்திய ஆன்லைன் வர்த்தகத் துறையில், ஃபிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகியவை முன்னணி நிறுவனங்களாக உள்ளன.
மேலும், இவை இரண்டுமே போட்டி நிறுவனங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், எதிர் எதிர் துருவமாக உள்ள இந்நிறுவனங்களை ஒன்றாக இணைக்க முடிவு செய்திருப்பது மிகுந்த வியப்பை அளித்துள்ளது.
ஜப்பானை சேர்ந்த #SoftBank இதற்கான பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, இவ்விரு நிறுவனங்களும் இணையும்போது, சாஃப்ட்பேங்க் இதன் வளர்ச்சிப் பணிகளுக்குத் தேவையான முதலீடை வழங்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும், இவ்விரு நிறுவனங்களிலும் சாஃப்ட்பேங்க் கணிசமான பங்குகளை வாங்கி, புதிய முதலீட்டாளராகவும் சேர உள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறும்பட்சத்தில், இந்திய ஆன்லைன் வர்த்தகத் துறையில், அமேசான் நிறுவனத்தை, எளிதாக வீழ்த்த முடியும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன...
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
