ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவாவுடன் இணையும் சிவகார்த்திகேயன்

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை சிவா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு
விரைவில் முடிவடைந்த நிலையில், டப்பிங் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து பொன்.ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூன் 16-ம் தேதி முதல் தென்காசியில் தொடங்கவுள்ளது.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். இதனிடையே ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் நடித்துக் கொடுக்க சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதற்கான இயக்குநரை ஸ்டுடியோ கீரின் தயாரிப்பு நிறுவனமே தேர்வு செய்யும்படி நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். இயக்குனர் சிவா 'சிறுத்தை' படபிடிப்பு சமயத்திலேயே அடுத்து ஒரு படம் தங்களுடைய நிறுவனத்துக்கு இயக்கும்படி இயக்குனர் சிவாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.
அந்த ஒப்பந்தத்தின்படி சிவகார்த்திகேயன் - சிவா இணைப்பில் படமொன்றை தொடங்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சில காலங்களுக்கு முன்பே, சிவகார்த்திகேயனை சந்தித்து கதையொன்றை தெரிவித்துள்ளார் இயக்குனர் சிவா. தற்போது இருவரும் இணைவது ஏற்கனவே சிவா கூறியுள்ள கதையா, இல்லையென்றால் வேறொரு கதையா என்பது பற்றிய தகவல்கள் வெகுவிரைவில் வெளியாகும்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தயாரித்து வருகிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
