ஸ்டாலின் மீதான 7 அவதூறு வழக்குகளும் ஒத்திவைப்பு..!

ஸ்டாலின் மீதான 7 அவதூறு வழக்குகளும் வரும் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது. அடுத்த முறை நேரில் ஆஜராவதில் இருந்து ஸ்டாலினுக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அரசு குறித்து அவதூறாக பேசியதாக மு.க. ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரனார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததாக, கடந்த 2012ஆம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. அதன்பிறகு அவர் மீது 6 அவதூறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் அவை அனைத்தும் நிலுவையில் இருந்தன.
இந்நிலையில், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், மு.க.ஸ்டாலின் மீதான 7 வழக்குகளும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து, 2 வாரங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் மீதான வழக்குகளில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது.
நேரில் ஆஜரானால் மட்டுமே அதன்பிறகு விலக்கு அளிக்க முடியும் என நீதிபதி உத்தரவிட்டதால், இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்காக மு.க.ஸ்டாலின் ஆஜரானார். இதையடுத்து, அடுத்த விசாரணைகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக விலக்களித்த நீதிபதி சாந்தி, வழக்கு விசாரணையை வரும் 31ஆம் தேதி ஒத்திவைத்தார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
