வைரமுத்துவை மறைமுகமாக தாக்கிய கானா பாலா..!

முன்னெல்லாம் பாடலாசிரியர்கள் எழுதி தருவதை பாடிவிட்டுப்போன கானா பாலா இப்போது அவரே சொந்தமாகவும் பாடல் எழுத ஆரம்பித்து அவரே பாடியும் வருகிறார். அவையும் சூப்பர் ஹிட் ஆகின்றன. ‘மெட்ராஸ்’ படத்தில் ‘காகிதக்கப்பல்’ பாடலை கார்த்திக்காக எழுதி பாடிய பாடல் சூப்பர்ஹிட்டானது உங்களுக்கெல்லாம் தெரியும் தானே..
ஆனால் கானா பாலவுக்கு ஒரு படத்தில் அனைத்து பாடல்களையும் ஒருவரே ஆக்கிரமித்துக்கொல்வதில் உடன்பாடு இல்லை போலும். அது நேற்று மாலை நடைபெற்ற ‘நனையாத மழையே’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அவர் பேசியபோது நன்றாகவே வெளிப்பட்டது.
“இப்போதெல்லாம் ஒரு சில சீனியர்கள் ஒரு படத்தில் தாங்களே எல்லா பாடல்களையும் எழுதுவேன் என அடம்பிடிக்கிறார்கள். காரணம் என் பாட்டால் தான் படம் ஓடிச்சுன்னு சொல்வதற்காகத்தான். போனால் போகிறது என்று அவ்வப்போது ஒன்ரைரண்டு பாடல்களை மட்டும் சிலநேரம் விட்டுத்தருவார்கள்.. அப்படி இருக்ககூடாது” என பேசினார்..
இப்படி அவர் குறிப்பிட்டது மறைமுகமாக என்றாலும் அது நேரடியாகவே கவிஞர் வைரமுத்துவைத்தான் குறிக்கிறது என்பது விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் தெரியும்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
