Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா! சிறப்பு ரயில்கள் ரெடி!

On August 5, 2017
velangkanni
Share
velangkanni வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு கட்டண ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை: தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- crowdtrain * சென்னை எழும்பூர்-வேளாங்கண்ணி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். * வேளாங்கண்ணி-சென்னை எழும்பூர் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.05 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். * சென்னை சென்டிரல்-வேளாங்கண்ணி இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். * வேளாங்கண்ணி- சென்னை சென்டிரல் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். * எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இரவு 9 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். * வேளாங்கண்ணி-எர்ணாகுளம் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். * நாகர்கோவில்-வேளாங்கண்ணி மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். * வேளாங்கண்ணி-நாகர்கோவில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். * சென்னை எழும்பூர்-நாகப்பட்டினம் இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நாகப்பட்டினத்தை சென்றடையும். * வேளாங்கண்ணி-பாந்த்ரா இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, 31-ந் தேதி மதியம் 2.05 மணிக்கு பாந்த்ராவை சென்றடையும். இவ்வாறு தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.