வேலம்மாள் பள்ளி 76 இரட்டையர் மாணவர்களின் அணிவகுப்பு:

சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் 2014'ம் ஆண்டுக்கான குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதன் சிறப்பம்சமாக அந்த பள்ளியில் படிக்கும் 76 இரட்டையர் மாணவர்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இந்த இரட்டையர் அணிவகுப்பிற்கு பிரபல கர்நாடக இசை பாடகிகள் பாம்பே இரட்டையர் சகோதரிகள், கலைமாமணிகள் திருமதி. சரோஜா மற்றும் திருமதி. லலிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைகப்பட்டிருன்தனர். அவர்களுடன் இரட்டையர் பாடகிகள் ஆர்த்தி மற்றும் அர்ச்சனா இந்த நகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பள்ளியில் படிக்கும் 76 இரட்டையர்களும் சிறப்பு விருந்தினர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பிறகு, கண்கவர் சிறப்பு ஆடையணிந்த இரட்டையர் போட்டி, தனித்திறன் இரட்டையர் போட்டி ஆகிய இரட்டையர்கள் போட்டி நடைபெற்றது. இதை தவிர சுற்றுசூழல் பாதுகாப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்திய 145 ஓவிய மாணவக் கலைஞர்களுக்கு பாராட்டு, மேஜிக் நிகழ்ச்சி என பல போட்டிகள் நடைபெற்றன.
பாடகிகள் ஆர்த்தி மற்றும் அர்ச்சனாவின் நிகழ்ச்சியில் பாடினர்.


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Next Postவிலாசம் – விமர்சனம்:
