Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வெள்ளத்தில் சிக்கியவருகளுக்கு முதல்வரின் நிவாரண நிதி...

On May 31, 2017
muthalvar
Share
muthalvar தமிழகத்தில் விழுப்புரத்தில் கடந்த சிலவாரங்களுக்கு முன் பெய்த பருவ மழையால் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பள்ளிகுளம் மேல்கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த திரு,திர்மால் என்பவரின் மகான் செல்வம் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், களத்தூர் கிராமத்தை சேர்ந்த திரு.தண்டபாணி என்பவரின் மகான் திரு.மணிகண்டன், திரு.சங்குவேல் என்பவரின் மகான் செல்வன் ஞானவேல் இவர்கள் இருவரும் இடி மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், மற்றும் விழுப்புரம் வட்டம், அரியலூர் திருக்கை கிராமத்தை சேர்ந்த திருமதி அங்காளம்மாள் என்பவரின் கொட்டகை மீது மரம் விழுந்து திருமதி அங்காளம்மாள் உயிரிழந்துள்ளார். இவ்வாறு வீட்டு சுவர் இடிந்து விழுந்த சிறுவன் செல்வம், இடி மின்னல் தாக்கி உயிரிழந்த திரு. மணிகண்டன், செல்வன் ஞானவேல், மற்றும் மரம் விழுந்து உயிரிழந்த திருமதி அங்காளம்மாள் ஆகியோரின் குடும்பத்துக்கு தமிழக முதலவர் திரு.எடப்பாடி கே.பழனி சாமி அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக நிவரங்கள் வழங்க கோரி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.