Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வெளியானது பிக்பாஸ் 'லாஸ்லியா'வின் "பிரண்ட்ஷிப்" ஃபர்ஸ்ட் லுக்..

On June 6, 2020
poster
Share
அர்ஜுன், ஹர்பஜன் சிங், லாஸ்லியா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி வரும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறியப்பட்ட லாஸ்லியா பிரண்ட்ஷிப் படத்தில் நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். இப்படத்தில் படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்ட நிலையில் கொரோனா காரணமாகப் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. அந்த ஃபர்ஸ்ட் லுக்கில் அர்ஜுன், ஹர்பஜன் சிங், லாஸ்லியா ஆகிய மூவருமே இடம்பெற்றுள்ளனர். விரைவில் மீதி படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டு படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.