வெளியானது சந்தானம் நடிக்கும் "டிக்கிலோனா" படத்தின் பர்ஸ்ட் லுக்..

சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி என அந்தக் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை நடிப்பில் கொண்டு வரும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மேலும் காமெடிக்கு வலு சேர்க்க மொட்டை ராஜேந்திரன், ஷாரா நடிக்கிறார்கள். அருண் அலெக்ஸாண்டர் ஒரு வேடமேற்க பிரபல திரைப்பட விமர்சகர் இட்டிஸ் பிரசாந்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி டிக்கிலோனோ படத்தில் தோன்றும் அனைத்து நடிகர்களும் மக்களுக்கு பரிட்சயமானவர்கள் என்பதோடு பிடித்தமானவர்களும் கூட.
சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குகளும் மூன்றாக வெளியிடப்படவுள்ளன. அவை இன்று முதல் அடுத்த 2 நாட்களில் தொடர்ச்சியாக வெளியிடப்படவுள்ளதாக சந்தானம் அறிவித்திருந்தார். தற்போது இப்படத்தின் முதல் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர் பேக்டரி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, தேர்ந்த கேமராமேனாக ஆர்வி பணியாற்ற, எடிட்டராக ஜோமின் அசத்த இருக்கின்றனர்.
இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி என அந்தக் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை நடிப்பில் கொண்டு வரும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மேலும் காமெடிக்கு வலு சேர்க்க மொட்டை ராஜேந்திரன், ஷாரா நடிக்கிறார்கள். அருண் அலெக்ஸாண்டர் ஒரு வேடமேற்க பிரபல திரைப்பட விமர்சகர் இட்டிஸ் பிரசாந்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி டிக்கிலோனோ படத்தில் தோன்றும் அனைத்து நடிகர்களும் மக்களுக்கு பரிட்சயமானவர்கள் என்பதோடு பிடித்தமானவர்களும் கூட.
சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குகளும் மூன்றாக வெளியிடப்படவுள்ளன. அவை இன்று முதல் அடுத்த 2 நாட்களில் தொடர்ச்சியாக வெளியிடப்படவுள்ளதாக சந்தானம் அறிவித்திருந்தார். தற்போது இப்படத்தின் முதல் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர் பேக்டரி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, தேர்ந்த கேமராமேனாக ஆர்வி பணியாற்ற, எடிட்டராக ஜோமின் அசத்த இருக்கின்றனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.