Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வெளியானது அருள்நிதியின் 'கே 13' - ஃபர்ஸ்ட் லுக்..!

On January 8, 2019
xfgdfbgc
Share
மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படம் நல்ல வரவேற்பை பெற்று, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது. தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடிக்கும் அருள்நிதி, அடுத்ததாக பரத் நீலகண்டன் இயக்கும் படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது உருவாகியுள்ள 'கே 13' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு. தற்போது, 'கே 13' என்று பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ஸ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை எஸ்பி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் 2019-ல் அருள்நிதி நடிப்பில் முதல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.