Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வெளியாகிறது கவுதம் கார்த்திக்கின் அடுத்தப்படம்!

On November 16, 2017
dnxjikluiaapfmo
Share
 , indirajith-123-665x365 கலாபிரபு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - அஷ்ரிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்திரஜித் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  , வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக். தொடர்ச்சியாக ஏராளமான படங்களை கைவசம் வைத்துக் கொண்டு, பிஸியான வலம் வரும் நடிகராக இருக்கிறார். அடல்ட் காமெடியான 'ஹர ஹர மஹாதேவகி' படத்தின் வெற்றிக்கு பிறகு, 'இந்திரஜித்' படத்தில் நடித்து வந்தார் .  , இந்த வருடத்தில் மட்டும்  ‘முத்துராமலிங்கம்’, ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’, ‘ஹர ஹர மஹாதேவகி’ என 4 படங்கள் வெளியாகியுள்ளன. இதில் சில படங்கள் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளன. அடுத்ததாக இம்மாதம் 24ம் தேதி கவுதம் கார்த்திக்கின் 'இந்திரஜித்'  படத்தின் ரிலீஸ் தேதி அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் அட்வென்சர் கதைக் களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில்  வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.  , கெளதம் கார்த்திக் நடிப்பில், சக்கரகட்டி படத்திற்கு பிறகு கலைப்புலி எஸ். தாணுவின் மகனான கலாபிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `இந்திரஜித்'.. அஷ்ரிதா ஷெட்டி, சோனாரிகா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். கேபி இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.  , dnxjikluiaapfmo கவுதம் கார்த்திக் - அஷ்ரிதா ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இருக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சோனாரிகா படோரியா, ராஜ்வீர் சிங், சுதன்சு பாண்டே, அமித், பிரதாப் போத்தன், சச்சின் கெடேக்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.  , கேபி இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தான் சிபிராஜ் நடிப்பில் `சத்யா' படமும், அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் `சென்னை 2 சிங்கப்பூர்' படமும் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ,  ,  , [video ]https://youtu.be/gWZwfjfgwGs[/video]

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.