வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ள மாட்டேன்: மாதவன்

மாதவன், விஜய் சேதுபதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, நடித்த படம் விக்ரம் வேதா. புஷ்கர் காயத்ரி இயக்கிய படத்தை ஒய்நாட் சசி தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் 100வது நாள் விழா நேற்று நடந்தது. படம் தொடர்பான நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
விழாவில் மாதவன் பேசியதாவது:

"இந்த படம் வெளிவந்த அன்றே நான் வெளியூர் சென்று விட்டேன். இன்று தான் திரும்பியிருக்கிறேன். இந்தப் படத்தின் 100வது நாள் விழாவில் பேசுவேன் என்று ஆடியோ விழாவில் பேசினேன். அந்த அளவிற்கு இந்த படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கினார்கள். பணியாற்றிய அனைவருமே ஒரு ஈடுபாட்டுடன் பணியாற்றினார்கள். அப்போதே வெற்றி எனக்குத் தெரிந்தது. ஆனால் அந்த வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ள மாட்டேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி:
"பிற்காலத்தில் எனது வரலாறு எழுதப்பட்டால் அதில் இந்த படத்துக்கு தனி முக்கியத்துவம் இருக்கும். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதைத்தான் இந்தப் படம் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது" என்றார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.

