Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வெற்றிகரமாக நடத்திய அடுத்த இதய அறுவை சிகிச்சை...நடிகரின் மனித நேயம்...

On January 26, 2017
Raghava Lawrence 132nd Open heart Surgery
Share
Raghava Lawrence 132nd Open heart Surgery நடிகர் ராகவா லாரன்ஸ் சமுக சேவைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உறுதுணையாக இருந்து மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திகொண்டார். அப்போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த ராகவா லாரன்ஸுக்கு கழுத்தில் காயம் இருந்த காரணத்தினால் அவர் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டார். ராகவா லாரன்ஸ் மனம் தெரிந்து பலர் அவர்களுடைய குழந்தைகளின் உடல்நலம் குறித்து உதவி கேட்டு வருவது வழக்கம். அந்த வகையில் பலருக்கு மருத்துவ உதவிகளுக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு உதவி புரிந்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு ஒரு ஐந்து மாத குழந்தைக்கு திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தன்னுடைய சமுக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். அந்த குழந்தைக்கு திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவுற்றது என அவருடைய சமுக வலைத்தளத்தில் இன்று தெரிவித்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது இந்த குழந்தைக்கு அவர் சார்பாக நடைபெற்றுக்கும் 132'வது திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சையில் ஈடுப்பட்ட மருத்துவர்கள், இவருடைய பணியாளர்கள் மற்றும் இந்த குழந்தை குணமடைய பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் தன்னுடைய நன்றியையும் அந்த பதிவில் தெரிவித்திருந்தார். ராகவா லாரன்ஸின் இந்த மனித நேயத்தை நாமும் பாராட்டுவோம். வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ்.....

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.